வாழ்க்கையில் கஷ்டம் தொடர்ந்துகொண்டே இருக்கிறதா?.. உடனே தேங்காய் பரிகாரத்தை செய்யுங்கள்..!

வாழ்க்கையில் வறுமையின் பிடியில் சிக்கி எப்படியாவது அதிலிருந்து மீண்டு வரவேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் இருக்கும்.

புதியதாக கடனை வாங்கிக்கொண்டு கூட பல பெரிய பரிகாரங்களை செய்வார்கள்.

அப்படி, வறுமையில் இருப்பவர்களின் கஷ்டங்கள் தீர ஒரு சுலபமான பரிகாரத்தை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

முதலில் பூஜை அறையை நன்றாக சுத்தம் செய்துவிட்டு பன்னீர் தெளித்து, சாம்பிராணி தூபம் போட்டு வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு தலைவாழை இலையை சாமி படத்திற்கு முன்பு வைத்து, அதன்மேல் மஞ்சள் குங்குமம் வைத்த தேங்காய் ஒன்றை வைக்கவும்.

ஒரு தாம்பூலத்தில் 108 என்ற கணக்கில் மல்லிகை பூவையும், சிறிதளவு குங்குமமும் எடுத்துக் கொள்ள வேண்டும். மல்லிகைப்பூ இல்லாவிட்டால் வாசனை மிக்க எந்த குருவாக இருந்தாலும் அதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

அந்த 108 மல்லிகைப் பூவில் இருந்து ஒவ்வொன்றாக எடுத்து வாழை இலையின் மீது வைத்திருக்கும் தேங்காய் மேல் போட்டு, அதனுடன் சிறிதளவு குங்குமத்தையும் போட்டு அர்ச்சனை செய்ய வேண்டும்.

ஒவ்வொரு முறை அர்ச்சனை செய்யும் போதும் இந்த மகாலட்சுமி மந்திரத்தை உச்சரிப்பது வறுமையைப் போக்கும் சிறந்த வழியாகும். உங்களுக்கான மகாலட்சுமி மந்திரம் இதோ.

ஒம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலயே ப்ரசீத ப்ரசீத
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் மஹாலக்ஷ்ம்யை நமஹா

இந்தப் பரிகாரத்தை வெள்ளிக்கிழமை செய்வது மிகவும் சிறந்தது. 108 முறை மந்திரத்தை உச்சரித்த பின்பு ஒரு மஞ்சள் நிற துணியில் அந்த தேங்காயை வைத்து மஞ்சள் நிற நூலினால் அழுத்தமாக கட்டி வீட்டு வாசற்படியின் மேல்பகுதியில் நடுவே கட்டி தொங்கவிட வேண்டும். 15 நாட்களுக்கு ஒருமுறை இந்த பரிகாரத்தை செய்வதில் சிறந்தது.

பழைய தேங்காயை எடுத்து ஓடும் நீரில் போட்டுவிடலாம். துணியை துவைத்து மீண்டும் அதே துணியை பயன்படுத்திக்கொள்வதில் எந்த தவறும் இல்லை. பௌர்ணமியும், வெள்ளிக்கிழமையும் சேர்ந்து வரும் தினத்தில் இந்த பரிகாரத்தை செய்வது இன்னும் சிறப்பானது.

இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் நல்ல பலன் இருப்பதை நம்மால் உணர முடியும். இந்த பரிகாரத்தை நம் வீட்டிலும் செய்யலாம். தொழில் செய்யும் இடத்திலும் செய்யலாம்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like