இந்த ராசிக்கு குருவால் பணப்புழக்கம் அதிகரிக்கும்! யாருக்கு விபரீத ராஜயோகம் தேடி வரும் தெரியுமா?

வாழ்க்கை என்பது ஏற்ற இறக்கம் நிறைந்ததாகவே இருக்கிறது. வரப்போகிற ஏழு நாட்களில் உங்களுக்கு எப்படி இருக்கும்.

2020 ஆம் ஆண்டின் 2 வது மாதமான பிப்ரவரி மாதத்தின் மூன்றாவது வாரத்தின் இரண்டாவது நாள் 12 ராசிக்காரர்களுக்கு என்ன நடக்கும் என்பது குறித்து ராசி பலனில் கனிக்கப்பட்டுள்ளது.

12 ராசிக்காரர்களும் ராசி பலனை பாருங்கள்.

மேஷம்
கோபத்தை கட்டுப்படுத்தி வாழ்வில் உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். தெய்வ அனுகூலம் உண்டு. உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். உத்தியோகத்தில் தைரியமாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். மாற்றங்கள் நிறைந்த நாள்.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

ரிஷபம்
சந்திராஷ்டமம் தொடர்வதால் உணர்ச்சி வசப்படாமல் சிந்தித்து செயல்படுங்கள். எதிர்காலத்தைப் பற்றிய கவலைகளை தவிர்ப்பது நல்லது. தடைப்பட்ட வேலையை மாறுபட்ட அணுகுமுறையால் முடிக்க முயற்சி செய்வீர்கள். உத்தியோகத்தில் பிறரின் குறைகளை சுட்டிக் காட்டவேண்டாம். விழிப்புணர்வு தேவைப்படும் நாள்.

மிதுனம்
கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். திருமண பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். சகோதர சகோதரிகளால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். மகிழ்ச்சியான நாள்.

கடகம்
பணப்புழக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். பூர்வீக சொத்து பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும். வழக்கு விஷயங்கள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். தொட்டது துலங்கும் நாள்.

சிம்மம்
வருங்காலத்திற்கு தேவையான விஷயங்களை அறிந்து முன்கூட்டியே திட்டமிடுவீர்கள். பிள்ளைகளால் பெருமைப்படக் கூடிய சூழல் உருவாகும். வியாபாரத்தை விரிவு படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். நல்லது நடக்கும் நாள்.

கன்னி
சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வீடு, வாகன செலவுகள் அதிகரிக்கும். பணம் பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். எதிர்பாராத நன்மைகள் ஏற்படும் நாள்.

துலாம்
குடும்பத்தினருடன் வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். எடுக்கும் காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும் . உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். வெற்றி பெறும் நாள்.

விருச்சிகம்
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை அதிகரிக்கும். கணவன்-மனைவிக்குள் மனம்விட்டு பேசுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வீட்டின் வசதிகளை மேம்படுத்துவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள் . மகிழ்ச்சி கிட்டும் நாள்.

தனுசு
ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மற்றவர்களை அனுசரித்து போவது நல்லது. யாரையும் உங்களுடன் ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். உங்களின் அணுகு முறையை மாற்றிக் கொள்வது நல்லது. வியாபாரத்தில் போட்டிகளை சமாளிக்க வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் பிரச்சினைகள் வந்து நீங்கும். விழிப்புணர்வு தேவைப்படும் நாள்.

மகரம்
கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது, ஆவணங்கள் விஷயத்தில் கவனம் தேவை. மருத்துவ செலவுகள் உண்டாகும். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும் . பொறுமைத் தேவைப்படும் நாள்.

கும்பம்
உங்கள் செயல்களில் திறமை வெளிப்படும். உறவினர்கள், நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். சேமிப்பை அதிகப்படுத்துங்கள். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். இனிமையான நாள்.

மீனம்
எதையும் சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கும். மனைவி வழியில் பக்கபலமாக இருப்பார்கள். மற்றவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு பாராட்டு கிடைக்கும். கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வெற்றி பெறும் நாள்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like