கடன் தொல்லை நீங்கி பணப்புழக்கம் அதிகரிக்க இந்த ஒரு பொருள் வீட்டில் இருந்தால் போதும்

கடன் பிரச்சனை, பணம் பற்றாக்குறை ஆகிய பிரச்சனைகள் நீங்குவதற்கும் எத்தனையோ பரிகாரங்கள், வழிபாடுகள் செய்தும் பலனில்லை என்பவர்கள் வீட்டில் சில குறிப்பிட்ட பொருட்களை வாங்கி வைத்தாலே போதும்.

நாம் சாதாரணமாக பயன்படுத்தும் பல பொருட்களுக்கு பணத்தை ஈர்க்கும் ஆற்றல் உள்ளது. இவற்றை முறையாக பயன்படுத்தினால் அதற்கான முழு பலனையும் அடைய முடியும்.

அப்படி பணத்தை ஈர்த்து, பொருளாதாரம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கக் கூடிய ஒரு பொருள் வெட்டிவேர். இது பழங்காலம் தொட்டே தமிழர்களால் மருத்துவ குணத்திற்காகவும், நறுமணத்திற்காகவும் பயன்படுத்தப்பட்டு வரும் பொருள் தான்.

வெட்டிவேர் மருத்துவ குணம் மிக்கது மட்டுமல்ல ஆன்மிகத்திலும், வாஸ்து சாஸ்திரத்திலும் பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான பொருளாகும். மகாலட்சுமிக்கு விருப்பமான பொருட்களில் வெட்டிவேரும் ஒன்று.

வெட்டிவேரை பூஜை அறை, பணம் வைக்கும் இடங்களில் வைப்பதாக வீட்டில் எப்போதும் நறுமணமும் தெய்வீக தன்மையும் நிறைந்திருக்கும். வெட்டிவேரை திரியுடன் சேர்த்து திரித்து, தினமும் வீட்டில் விளக்கேற்றி வந்தால் நினைத்த காரியங்கள் வெற்றி அடையும்.

வெட்டிவேரை மாலையை சுவாமி படங்களுக்கும், முன்னோர்களின் படங்களுக்கும் வாங்கி அணிவிக்கலாம். வெட்டிவேரை நிலைவாசலில் கட்டி வைப்பதால் வீட்டிற்குள் எதிர்மறை ஆற்றல்கள் அண்டாது.

துர்தேவதைகள், எதிர்மறை ஆற்றல்கள் ஆகியவற்றின் அதிர்வலைகள் நீங்கி, வீட்டில் மகாலட்சுமி குடியேற துவங்குவாள். வெட்டிவேரை வீட்டில் வைத்திருப்பதால் கண் திருஷ்டி நீங்கும். குறைவில்லாமல் பணம் வந்து கொண்டே இருக்கும். வருமானம் பெருகும்.

வீட்டில் உள்ள வறுமை நிலை, கஷ்டங்கள், மன வருத்தங்கள் மறையும். இதனை பூஜையை இருக்கும் சுவாமி படங்களுக்கு பயன்படுத்துவதால் அதில் உயிரோட்டம் அதிகரிக்கும். வெட்டிவேர் வீட்டில் விதமான அற்புதங்களை நிகழ்த்தக் கூடியதாகும்.

மகாலட்சுமி மற்றும் விநாயகப் பெருமானுக்கு மிகவும் உகந்தது வெட்டிவேர். வெற்றியை தரும் வேர் என்பதால் நினைத்த காரியங்களில் வெற்றி, முயற்சிகளில் வெற்றி, காரிய தடைகளை அகற்றுதல், வருமானத்தை பெருக்குதல், நன்மைகளை அதிகரிக்கச் செய்தல் ஆகியவற்றை பெற்றுத் தரும்.வெட்டிவேர் வீட்டில் இருந்தால் தெய்வீகத் தன்மை அதிகரிக்கும்.

கடன் தொல்லை நீங்கி பணப்புழக்கம் அதிகரிக்க இந்த ஒரு பொருள் வீட்டில் இருந்தால் போதும் | Astrology Debt Problem Will Removed Cash Increase