இன்றைய ராசிபலன் 1 நவம்பர் 2019

பஞ்சாங்கம்

நாள்வெள்ளிக்கிழமை
திதிபஞ்சமி
நட்சத்திரம்மூலம்
யோகம்அமிர்தயோகம்
ராகுகாலம்காலை 10.30 முதல் 12 வரை
எமகண்டம்பகல் 3 முதல் 4.30 வரை
நல்லநேரம்காலை 9 முதல் 10 வரை மாலை 4.45 முதல் 5.45 வரை
சந்திராஷ்டமம்கிருத்திகை
சூலம்மேற்கு
பரிகாரம்வெல்லம்

 

மேஷராசி அன்பர்களே!

இன்று புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. வழக்கமான பணிகளிலும் மிகுந்த கவனம் தேவைப்படும். குடும்பத்தில் சிறிசிறு சலசலப்புகள் ஏற்பட்டாலும் பொறுமை காப்பது அவசியம். பிள்ளைகள் வகையில் செலவுகள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிப்பதால், உடலும் மனமும் சோர்வடையும். சக ஊழியர்களின் விஷயங்களில் தலையிடவேண்டாம். வியாபாரத்தில் வியாபாரம் மந்தமாகத்தான் இருக்கும். பணியாளர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அவ்வப்போது மனக்குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்.

ரிஷபராசி அன்பர்களே!

தன்னம்பிக்கையுடன் செயல்படும் நாள். முக்கிய முடிவு எடுப்பதற்குச் சாதகமான நாள். செலவு களுக்குத் தேவையான பணம் இருப்பதால் பிரச்னை இருக்காது. உறவினர்கள் சிலர் உங்கள் யோச னையைக் கேட்டு வருவார்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணை வழி உறவுகளிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். அலுவலகத் தில் பணிச்சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

மிதுனராசி அன்பர்களே!

புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். தந்தையின் விருப் பத்தை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். அலுவலகத்தில் உற்சாகமாகப் பணிகளில் ஈடுபடுவீர்கள். எதிர்பார்த்த சலுகை இன்று கிடைக்கும். வியாபாரத்தில் சக வியாபா ரிகளால் ஏற்பட்ட இடையூறு நீங்கும். லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை ஏற்படும்.

கடகராசி அன்பர்களே!

தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். பிள்ளைகளால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும் அரவணைத்துச் செல்லவும். உணவு வகைகளால் அலர்ஜி ஏற்பட வாய்ப்பு உள்ளதால், வெளியிடங்களில் உண்பதைத் தவிர்க்கவும். மாலையில் உறவினர்கள் வருகை சந்தோஷத்துடன் செலவுகளும் ஏற்படும். அலுவலகத்தில் சக பணியாளர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வார்கள். வியாபா ரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சியை காலையில் தொடங்குவது நல்லது.

சிம்மராசி அன்பர்களே!

இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். தந்தையுடன் ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடு நீங்கும். உடல்நலனில் கவனம் தேவை. உறவினர்களுடன் பேசும்போது பதற்றம் கொள்ளாமல் இருப்பது அவசியம். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் மிகவும் கவனமாக இருக்கவும்,. எதிர்பார்த்த சலுகை கிடைப்பதில் தாமதம் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர்கள் நல்லமுறையில் ஒத்துழைப்பு தருவார்கள்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் ஆதாயமும் ஏற்படக்கூடும்.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் நன்மை ஏற்படக்கூடும்.

கன்னிராசி அன்பர்களே!

எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். வீட்டில் உள்ளவர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். இளைய சகோதர வகையில் அனுகூலம் உண்டு. வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். நீண்டநாள்களாகச் சந்திக்காமல் இருந்த பள்ளி, கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடி இருந் தாலும், பணியாளர்களால் செலவுகள் ஏற்படக்கூடும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையின் தேவையை நிறைவேற்ற செலவு செய்யவேண்டி வரும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தைவழி உறவினர்களால் செலவுகள் ஏற்படும்.

துலாராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது சாதகமாக முடியும். கணவன் – மனைவிக் கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். அலுவலகத்தில் பணிச்சுமை சற்று அதிகமாகத்தான் இருக்கும். சக பணியாளர்கள் அனுசரனையாக நடந்துகொள்வார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவான அணுகுமுறை அவசியம்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் செலவுகள் ஏற்படும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க அதிகாரிகளால் நன்மை உண்டாகும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.

விருச்சிகராசி அன்பர்களே!

காலையில் வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படும். பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். கணவன் – மனைவிக்கிடையில் அந்நியோனம் அதிகரிக்கும். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். அலுவலகத்தில் சக பணியாளரின் பணியையும் நீங்கள் பார்க்கவேண்டி வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட விற்பனை சற்று குறைவாகத்தான் இருக்கும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பார்கள்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.

தனுசுராசி அன்பர்களே!

உற்சாகமாகக் காணப்படுவீர்கள். தாயின் தேவையறிந்து அவருக்கு உதவுவீர்கள். ஆனால், திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிக்கு ஆதரவு தருவார். மாலையில் குடும்பத்துடன் வெளியில் சென்று வருவீர்கள். அலுவலகத்தில் பணிகளை உடனுக்குடன் செய்து முடித்து அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். பங்குதாரர்களிடம் கேட்ட உதவி கிடைக்கும்.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் ஆதாயம் உண்டாகும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும்.

மகரராசி அன்பர்களே!

தேவையான பணம் கைக்குக் கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். துணிச்சலாகச் சில முடிவுகளை எடுப்பீர்கள். தந்தையின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். இளைய சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக அமையும். அலுவல கத்தில் சற்று நெருக்கடி ஏற்பட்டாலும், சமயோசிதமாகச் சமாளித்து, சக ஊழியர்களின் பாராட்டுக ளைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் பணியாளர்கள் நல்லமுறையில் ஒத்துழைப்பு தருவார்கள். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும்.

கும்பராசி அன்பர்களே!

தேவையான பணம் இருந்தாலும், தேவையற்ற செலவுகளும் ஏற்படக் கூடும். உறவினர் வருகையால் வீட்டில் சிறு சங்கடம் ஏற்படும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும். இழுபறியாக இருந்து வந்த அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடி யும். தந்தைவழியில் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் மறைமுகத் தொந்தரவுகள் ஏற்படக்கூடும் என்பதால், எச்சரிக்கையாக இருக்கவும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திடீர்ப் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம்.

மீனராசி அன்பர்களே!

இன்றைக்கு வழக்கமான பணிகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்கவேண்டாம். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் கிடைக்கும். உறவினர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். அலுவலகத்தில் உங்கள் பணிகளை மற்றவர்களிடம் ஒப்படைக்காமல் நீங்களே செய்வது நல்லது. வியாபாரத்தில் பணியாளர்களால் வீண் செலவுகள் ஏற்படக் கூடும். லாபமும் சுமாராகத்தான் இருக்கும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் ஏற்படும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் வீண்விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்..

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like